அதிர்ச்சி... மாமியாரை சுட்டுக்கொன்ற மருமகன்: ரூ.4 லட்சத்துக்காக நடந்த கொடூரம்

கொலை செய்த பிரசாத்
கொலை செய்த பிரசாத்

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் மாமியாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த மருமகனை, உறவினர்கள் கல்லால் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுண்டம் காவல் ஆணையரகத்தில் காவலராக பணியாற்றி வரும் பிரசாத் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கமலம்மா என்பவரின் மகளை திருமணம் செய்து கொண்டார். மாமியார் கமலம்மா மருமகன் பிரசாத்திற்கு 4 லட்ச ரூபாய் பணம்  தர வேண்டும் என தெரிகிறது.

கொலை செய்யப்பட்ட கமலம்மா
கொலை செய்யப்பட்ட கமலம்மா

ஆனால் பிரசாத் பணத்தை கேட்டும் போதெல்லாம் கமலம்மா அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு வந்த பிரசாத் தனது மாமியார் கமலம்மாவிடம் பணம் குறித்து  கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரசாத் திடீரென கமலம்மாவை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த கமலம்மாவின் உறவினர்கள் காவலர் பிரசாத்தை கற்களால் சரமாரியாக தாக்கினர்.

தகவல் அறிந்து வந்த போலீஸார், பலத்த காயம் அடைந்த பிரசாத்தை மீட்டு வாரங்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in