நீட் தற்கொலைகளுடன் போட்டியிடும் ஐஐடி நுழைவுத்தேர்வு தற்கொலைகள்; தொடரும் கோட்டா துயரம்

பாடச்சுமையால் அதிகரிக்கும் தற்கொலைகள்
பாடச்சுமையால் அதிகரிக்கும் தற்கொலைகள்

நீட் நுழைவுத்தேர்வு மாணவர்கள் மத்தியிலான தற்கொலை அவலங்களுக்கு நிகராக, ஐஐடி நுழைவுத்தேர்வான ஜேஇஇ-க்கு தயாராகும் மாணவர்களின் தற்கொலை துயரங்களும் அதிகரித்து வருகின்றன.

தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியிலான தற்கொலை சம்பவங்கள் அரசியல், சமூகம் என பல மட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியதில், நீட் தேர்வுக்கு எதிரான நீண்ட போராட்டமாக உருவெடுத்துள்ளன. தமிழகத்துக்கு வெளியே இந்த நீட் தற்கொலைகளுக்கு நிகராக, ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. ராஜஸ்தானின் கோட்டா இதற்கான அவல உதாரணமாக விளங்குகிறது.

தற்கொலையில் தள்ளும் நுழைவுத் தேர்வுகள்
தற்கொலையில் தள்ளும் நுழைவுத் தேர்வுகள்

நீட் நுழைவுத்தேர்வு மருத்துவ உயர்கல்விக்கானது எனில், ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஐஐடி -பொறியியல் உயர்கல்வி சேர்க்கைக்கானது. கோட்டாவில் நீட், ஜேஇஇ உட்பட பலவாறான நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் நிறைந்திருக்கின்றன. இந்த தேர்வுகளுக்கான பயிற்சிக்காக நாடெங்கிலும் இருந்து அதிக எண்ணிக்கையில் இங்கே மாணவ - மாணவியர் தங்கி பயின்று வருகின்றனர். மிகவும் சவாலான நுழைவுத்தேர்வுகளுக்கு தயாராவதில் இவர்கள் பெரும் மன அழுத்தத்துக்கும் ஆளாகிறார்கள். இவர்கள் மத்தியில் நாளுக்கு நாள் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.

கோட்டாவில் கடந்தாண்டு சுமார் 30 மாணவ மாணவியர், நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத்தேர்வு நெருக்கடிகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். முன்னதாக 2022-ல் 15 மாணவர்களும், 2019-ல் 18, 2018-ல் 20, 2017-ல் 7, 2016-ல் 17 மற்றும் 2015-ல் 18 என ஆண்டுதோறும் நுழைவுத்தேர்வு அழுத்தங்களால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் அங்கே பதிவாகி வருகிறது. இதில் நீட் - ஜேஇஇ மாணவர்கள் இடையிலான தற்கொலைகள் போட்டியிடும் அளவுக்கு அங்கே உயர்ந்து வருகின்றன.

 நுழைவுத் தேர்வு மன அழுத்தம்
நுழைவுத் தேர்வு மன அழுத்தம்

இந்த வரிசையில் இன்று காலை ஐஐடி நுழைவுத்தேர்வுக்கான மாணவர் ஒருவர் தனது விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஜார்க்கண்டில் வசிக்கும் ஷுப் சௌத்ரி, கோட்டாவில் தங்கி ஜேஇஇ-மெயின் தேர்வுக்கு தயாராகி வந்தார். நேற்று ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியானபோது, ​​அவர் எதிர்பார்த்ததை விட மதிப்பெண் குறைவாக இருந்ததில் ஷுப் சௌத்ரி மனமுடைந்தார். விடுதி அறைக்கு திரும்பிய அவர், இன்று காலை தூக்கிட்டு சடலமான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டில் இது நான்காவது தற்கொலை என்பதால், அதிகரிக்கும் கோட்டா தற்கொலைகளை விரைந்து தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியன் ரயில்வேயில் 9,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

அதிர்ச்சி... ஒரே விடுதியில் அடுத்தடுத்து மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!

நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!

‘ஐயா மன்னிச்சுடுங்க...’ இயக்குநர் வீட்டு கதவில் தேசிய விருதுகளை தொங்க விட்ட திருடர்கள்!

கல்வி மட்டுமல்ல... 200 மாணவிகளுக்கு வீடும் கட்டித் தந்த ஆசிரியை; குவியும் பாராட்டுகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in