பாசி நிதிநிறுவன உரிமையாளர்கள் கடத்தல் வழக்கு... நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரி சரண்!

கோவை நீதிமன்ற வளாகம்
கோவை நீதிமன்ற வளாகம்
Updated on
2 min read

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் உரிமையாளர்களை கடத்தி பணம் பறித்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஐ.ஜி பிரமோத்குமார் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பாசி நிதி நிறுவனம் தங்கள் முதலீட்டாளர்களுக்கு இரு மடங்கு லாபம் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டனர். இந்த மோசடி வழக்கில் கமலவள்ளி, மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பாசி நிதி நிறுவன உரிமையாளர்கள் கமலவள்ளி உள்ளிட்ட சிலரை கடத்தி பணம் பறித்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. அப்போதைய மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பிரமோத்குமார், துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ஆய்வாளர் மோகன்ராஜ், இடைதரகர்கள் பிரபாகரன், செந்தில் குமார் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து இருந்தது.

ஐஜி பிரமோத்குமார்
ஐஜி பிரமோத்குமார்

இந்த வழக்கு கோவை மாவட்ட இரண்டாவது கூடுதல் சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கை அடுத்த ஆண்டு ஜூலைக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கோவை மாவட்ட சிபிஐ நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரமோத்குமார் ஐபிஎஸ் மற்றும் ஐந்து பேருக்கு எதிராக ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை சிபிஐ நீதிமன்றம்
கோவை சிபிஐ நீதிமன்றம்

இந்த வழக்கு கடந்த 25ம் தேதி கோவை 2வது கூடுதல் சிபிஐ நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஐ.ஜி பிரமோத்குமார் ஆஜராகவில்லை. அவரை தவிர மற்றவர்கள் ஆஜராகி இருந்தனர்.

இந்நிலையில் ஐ.ஜி பிரமோத்குமாருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை சிபிஐ நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ் பிறப்பித்தார். இந்நிலையில் ஐஜி பிரமோத்குமார் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in