காசாவில் தொண்டு நிறுவனத்தினர் படுகொலை... உலக நாடுகளின் கண்டனத்தை அடுத்து மன்னிப்பு கோரியது இஸ்ரேல் ராணுவம்

WCK பணியாளர் வாகனம் மீதான இஸ்ரேல் தாக்குதல்
WCK பணியாளர் வாகனம் மீதான இஸ்ரேல் தாக்குதல்

காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், உலக நாடுகளின் கண்டனத்தை அடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.

காசாவில் ’வேர்ல்டு சென்ட்ரல் கிச்சன்’(WCK) என்ற தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் ஏழு பேர் கொல்லப்பட்டது தொடர்பாக, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஹெர்சி ஹலேவி மன்னிப்புக் கேட்டுள்ளார். தொண்டு நிறுவன பணியாளர்களின் மரணங்கள் சர்வதேச அளவில் கொதிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து இஸ்ரேல் இறங்கி வந்துள்ளது.

களத்தில் WCK பணியாளர்
களத்தில் WCK பணியாளர்

தனது மன்னிப்பு கோரலின்போது ஹலேவி கூறுகையில் “இந்த சம்பவம் ஒரு பெரிய தவறு. அது நடந்திருக்கக் கூடாது. தவறாக அடையாளம் காணப்பட்ட தாக்குதல் இது. WCK உறுப்பினர்களுக்கு வேண்டுமென்றே தீங்கு விளைவித்ததற்காக நாங்கள் வருந்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

போரால் நிலைகுலைந்திருக்கும் காசாவில் அப்பாவி மக்களுக்கு உதவுவதற்காக அங்கே முகாமிட்டிருந்த WCK பணியாளர்கள் 7 பேர் கொல்லப்பட்டதற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோருடன், ஆஸ்திரேலிய மற்றும் போலந்து அரசாங்கங்களும் இணைந்து தங்களது கண்டனத்தை பதிவு செய்தன.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து, இடம்பெயர்ந்த காசா மக்களுக்கு உணவளிப்பது பெரும் சவாலாக நீடிக்கிறது. உணவின்றி சாகும் காசா மக்களுக்கு உதவுவதற்காக WCK அங்கே முகாமிட்டது. 100 டன் உணவுப் பொருட்கள் கடல் மார்க்கமாக காசாவுக்கு சென்று சேர்ந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் WCK லச்சினை பெரிதாக பொறித்த வாகனத்தில் சென்றவர்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

தங்களது நகர்வுகள் அனைத்தையும் WCK பணியாளர்கள் இஸ்ரேலுக்கு தெரிவித்த பின்னரே மேற்கொண்டு வருகின்றனர். அப்படி இருந்தும் இஸ்ரேல் வான்படைகள் அலட்சியமாக மேற்கொண்ட தாக்குதலில் அப்பாவி தொண்டு நிறுவனத்தின் பலியாகி உள்ளனர். இதனையடுத்து WCK அறக்கட்டளை காசா நோக்கி சென்ற தங்களது உணவு கப்பல்களை திரும்பப் பெற்றது.

காசாவில் உணவின்றி சாகும் பாலஸ்தீன மக்களுக்கான கடல் கடந்த உதவிகள் கேள்விக்குறியாகி உள்ளன. இஸ்ரேலின் தாக்குதல் வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்டது என WCK குற்றம்சாட்டுகிறது. காசாவில் உணவு என்பதை ஒரு ஆயுதமாக இஸ்ரேல் உருவாக்கி வருகிறதாகவும் WCK அறக்கட்டளையின் குற்றச்சாட்டு நீடிக்கிறது.

தங்களது தவறான தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படையின் தலைவர் மன்னிப்பு கோரியிருந்தபோதும், இஸ்ரேல் பெஞ்சமின் நெதன்யாகு, ‘போர்க்களத்தில் இது போன்ற தவறுகள் சாதாரணம்’ என கருத்து பகிர்ந்திருப்பது உலக நாடுகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in