ஐசிஐசிஐ வங்கியின் மொபைல் செயலியில் கோளாறு... 17,000 கிரெடிட் கார்டுகளுக்கு சிக்கல்!

ஐசிஐசிஐ
ஐசிஐசிஐ

ஐசிஐசிஐ வங்கியின் மொபைல் பேங்கிங் அப்ளிகேஷனான iMobile Payயில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, மற்றவர்களின் கிரெடிட் கார்டுகளின் முக்கியமான விவரங்களை செயலியில் பார்க்க முடியும் என்று பயனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் குற்றம்சாட்டிய டெக்னோஃபினோவின் நிறுவனர் சுமந்தா மண்டல், "பல பயனர்கள் தங்கள் iMobile Pay செயலி மூலமாக மற்ற வாடிக்கையாளர்களின் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு தகவல்களைப் பார்க்க முடியும் எனப் புகாரளித்துள்ளனர். முழு அட்டை எண், காலாவதி தேதி மற்றும் சிவிவி ஆகியவை குறித்து இந்த செயலியில் தெரியும். இதனை கொண்டு மற்றவர்களின் சர்வதேச பரிவர்த்தனை அமைப்புகளை ஒருவர் நிர்வகிக்க முடியும் என்பதால், சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு மற்றொரு நபரின் கிரெடிட் கார்டை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்த சிக்கலை அவசரமாக தீர்க்க ஐசிஐசிஐ வங்கியும், இந்திய ரிசர்வ் வங்கியையும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று மண்டல் தெரிவித்துள்ளார்.

ஐசிஐசிஐ
ஐசிஐசிஐ

இதுகுறித்து பல பயனர்கள் எச்சரிக்கையை எழுப்பிய பிறகு, சிக்கலைச் சரிசெய்ய வங்கி கிரெடிட் கார்டு தகவல்களுக்கான அணுகல் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள ஐசிஐசிஐ வங்கியின் செய்தித் தொடர்பாளர், "கடந்த சில நாட்களில் வழங்கப்பட்ட சுமார் 17,000 புதிய கிரெடிட் கார்டுகள் எங்கள் டிஜிட்டல் சேனல்களில் "தவறாக வரைபடமிடப்பட்டு" பொருத்தப்பட்டுள்ளன என்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. அவை வங்கியின் கிரெடிட் கார்டு போர்ட்ஃபோலியோவில் 0.1 சதவிகிதம் ஆகும். உடனடி நடவடிக்கையாக, இந்த அட்டைகளை நாங்கள் ப்ளாக் செய்துள்ளோம். மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். இதனால் கிரெடிட் கார்டுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த நிகழ்வும் இதுவரை பதிவாகவில்லை ” என்று தெரிவித்துள்ளார்.

ஐசிஐசிஐ
ஐசிஐசிஐ

இதனைத் தொடர்ந்து பேசிய மண்டல், "உங்கள் கார்டை யாராவது அணுகினால், அவர்கள் iMobile இல் OTP அல்லது MPIN இல்லாமல் அமைப்புகளை மாற்றலாம். கார்டை பிளாக் செய்து மாற்றுவதே சிறந்த வழி; இது சில தற்காலிக நிவாரணம் அளிக்கும்" என்று அவர் கூறினார்.


இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தியின் ஆண்மையை பரிசோதிக்க தாய், மகள்களை அவருடன் தூங்க அனுப்புங்கள்... காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!

நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!

முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in