முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: தட்டிக் கேட்ட மனைவியை கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்ற சைக்கோ கணவன்!

முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: தட்டிக் கேட்ட மனைவியை கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்ற சைக்கோ கணவன்!
அனில்குமார், சரோஜா.

முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்ததைத் தட்டிக் கேட்ட மனைவியை கண்ட, துண்டமாக வெட்டி டிரம்மில் அடைத்து வைத்த சைக்கோ கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள எஸ்பிஆர் ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் அனில்குமார். 2020-ம் ஆண்டு இவரது மனைவி மரணம் அடைந்தார். இந்தநிலையில், 6 மாதங்களுக்கு முன்பு சரோஜா என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

முதல் திருமணத்தை மறைத்து சரோஜாவை அனில்குமார் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டிற்கு சரோஜா சென்று விட்டார். ஒரு மாதத்திற்கு முன் மீண்டும் தன் கணவன் வீட்டிற்கு சரோஜா வந்துள்ளார்.

இந்த நிலையில், சரோஜாவின் தாயார் செல்போனில் அழைத்துள்ளார். ஆனால், சரோஜாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த சரோஜாவின் குடும்பத்தார், அனில்குமார் வீட்டிற்கு நேற்று வந்து பார்த்த போது, வீடு பூட்டிக் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்த அவர்கள், பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து அனில்குமார் வீட்டின் கதவை போலீஸார் உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். வீடு முழுவதும் ரத்தக்கறையாக இருந்தது. அங்கிருந்த டிரம்மை திறந்து பார்த்த போது சரோஜாவின் உடல் பாகங்கள் அழுகிய நிலையில் இருந்தது தெரிய வந்தது. சரோஜாவை கண்ட, துண்டமாக வெட்டி டிரம்மி்ல் வைத்தது தெரிய வந்தது. டிரம்மில் இருந்த உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அனில்குமாரை தேடி வருகின்றனர். இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in