
ஆபாச வீடியோவில் மனைவி இருப்பதாக கூறி அவரை சணல் பை தைக்கும் பெரிய ஊசியால் கணவர் சரமாரியாக குத்திய சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரேஷ் பூப்கர் (51). மார்க்கெட்டிங் நிபுணரான இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், புதிய செல்போன் வாங்கிய ஹரேஷ், அதில் ஆபாச வீடியோ பார்த்துள்ளார்.
அதில் இருந்த பெண், தன் மனைவி போல் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மனைவியிடம் கேட்ட போது, ஆபாச வீடியோவில் இருப்பது தான் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஹரேஷ், உன் காதலனுடன் நீ ஜாலியாக இருந்த வீடியோ தான் இது எனக் கூறி வாக்குவாதம் செய்தார்.
அன்று இரவு உறங்கிக் கொண்டிருந்த தனது மனைவியை சணல் பை தைக்கும் பெரிய ஊசியால் ஹரேஷ் சரமாரியாகக் குத்தினார். இதனால் அவரது மனைவியின் வயிறு, கை, கால் ஆகியவற்றில் குத்து விழுந்தது.
ஊசியால் குத்துப்பட்ட மனைவி அலறித் துடிப்பதைப் பார்த்து அவரது 24 வயது மகள், தந்தையைத் தடுத்துள்ளார். அவரையும் ஊசியால் ஹரேஷ் குத்தியுள்ளார். இதில் அவரது கைகளில் குத்து விழுந்தது. இதனால் காயமடைந்த இருவரும் ராஜ்கோட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஹரேஷுன் மனைவி பல்கலைக்கழக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், தனது கணவர் புதிய மொபைல் வாங்கிய பிறகு ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாகி விட்டதாகவும் புகார் கூறினார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆயினும் இரு குடும்பத்தினர் சமரசம் மூலம் பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.