குழந்தைகளை மறக்கவைத்த கள்ளக்காதல்... மாயமான மனைவியைக் கண்டுபிடித்து தரக்கோரி கணவர் தர்ணா!

மனைவி மாயம் - குழந்தைகளுடன் கணவர் தர்ணா போராட்டம்
மனைவி மாயம் - குழந்தைகளுடன் கணவர் தர்ணா போராட்டம்

திருப்பத்தூர் அருகே 2 குழந்தைகளுடன் தன்னை தவிக்க விட்டு, கள்ளக்காதலுடன் மாயமான மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி, கணவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் அடுத்த பொம்மிக்குப்பம் பழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் என்பவருக்கும், பள்ளவள்ளி பகுதியைச் சேர்ந்த விஜயசாந்தி என்பவருக்கும் 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 மற்றும் 2 வயதில், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் பள்ளவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் விஜயசாந்திக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை மதன்குமார் கண்டித்து வந்த போதும், அவர்கள் தங்கள் உறவை தொடர்ந்து உள்ளனர்.

2 குழந்தைகளின் தாய் கள்ளக்காதலனுடன் மாயம்
2 குழந்தைகளின் தாய் கள்ளக்காதலனுடன் மாயம்

இந்நிலையில் கடந்த 8ம் தேதி பிரபாகரனுடன் விஜயசாந்தி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மதன்குமார் கடந்த அக்டோபர் 9ம் தேதி, மனைவியை மீட்டு தரக்கோரி திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீஸார் புகாரின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே வீட்டை விட்டு வெளியேறிய இருவரையும் தேடும்பணியில் மதன்குமாரும் அவரது உறவினர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஈரோடு, பெங்களூரு, வேளாங்கன்னி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கள்ளக்காதல் ஜோடி கிடைக்கவில்லை. மேலும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என மதன் குமார் தொடர்ந்து கவலையில் இருந்து வந்துள்ளார்.

திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையம்
திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையம்

இந்நிலையில் போலீஸாரை கண்டித்து உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோருடன், மதன்குமார், திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையம் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், விஜயசாந்தியை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in