கணவனை கொலை செய்து கழிப்பறை டேங்கில் போட்ட மனைவி... 9 ஆண்டுகளுக்குப் பின் கைது!

கொலை செய்யப்பட்ட பாண்டி
கொலை செய்யப்பட்ட பாண்டி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட கணவனை அடித்து கொன்ற மனைவி 9 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டார். செப்டிக் டேங்கில் இருந்து கணவனின் எழும்பு கூடு மீட்கப்பட்டது.

கொலை
கொலைக்ரைம்-Crime

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கம்பன் தெருவில் உள்ள சீராளன் என்பவர் வீட்டின் செப்டிக் டேங்கில் இருந்து மனித எழும்புக் கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், இந்த வீட்டில் ஏற்கனவே ஆம்னி பஸ் டிரைவரான பாண்டி என்பவர் குடியிருந்துள்ளார். இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் வேலை பார்த்து வந்த பாண்டி எப்போதாவது தேவகோட்டைக்கு வருவது வழக்கம். இதே போல் 2014ல் தேவகோட்டை வந்த பாண்டி குடித்து விட்டு மனைவி சுகந்தியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே மோதல் நடந்துள்ளது. அப்போது பாண்டியின் தலை சுவற்றில் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அவரது உடலை தனது வீட்டின் கழிப்பறை தொட்டியில் போட்டுள்ளார் சுகந்தி. 6 மாதத்திற்கு பின் அந்த வீட்டில் இருந்து காலி செய்துள்ளார் சுகந்தி. இதனிடையே பாண்டியை காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திய போது தனது கணவர் வெளியூரில் வேலை பார்ப்பதாகவும், மாதந்தோறும் தனக்கு பணம் அனுப்புவதாகவும் சுகந்தி கூறியுள்ளார். இதையடுத்து அந்த புகார் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் சீராளன் தனது வீட்டின் கழிப்பறை தொட்டியை சுத்தம் செய்த போது கிடைத்த எழும்புக்கூடு மூலம் பாண்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கணவரை கொலை செய்த சுகந்தியை போலீஸார் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in