மகனின் பள்ளி பீஸ் பணத்தை சூதாட்டத்தில் தோற்ற கணவன்: வேதனையில் உயிரை மாய்த்த மனைவி

மகனின் பள்ளி பீஸ் பணத்தை சூதாட்டத்தில் தோற்ற கணவன்: வேதனையில் உயிரை மாய்த்த மனைவி

மகனுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த வைத்திருந்த பணத்தை கணவர் சூதாட்டத்தில் இழந்ததால் வேதனையில் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை நந்தம்பாக்கம் வடக்கு மாட வீதி 2-வது தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரி (39). இவருக்கு சுரேஷ் (40) என்ற கணவரும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ் வேலைக்கு செல்லாமல் சூதாட்டம் விளையாடி வந்துள்ளார். இதில் பெருமளவு பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுரேஷ் தனது மகனுக்காக பள்ளியில் கட்ட வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து சூதாட்டத்தில் தோற்றுள்ளார். இது மனைவி புவனேஷ்வரிக்கு தெரியவந்தது. இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது புவனேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனம் உடைந்த புவனேஸ்வரி இன்று படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் நந்தம்பாக்கம் போலீஸார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in