மனைவிக்கு விஷ ஊசி செலுத்திக் கொலை: தற்கொலை என்று நாடகமாடிய கணவன் சிக்கினார்

மனைவிக்கு விஷ ஊசி செலுத்திக் கொலை: தற்கொலை என்று நாடகமாடிய கணவன் சிக்கினார்

புனே மாவட்டத்தில் மனைவிக்கு விஷ ஊசி செலுத்திக் கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கணவன் போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் 23 வயது ஆண் செவிலியர் ஸ்வப்னில் சாவந்த், தனது மனைவிக்கு விஷ ஊசி போட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடினார்.

சாவந்த் மற்றும் பிரியங்கா ஷேக்த்ரே ஆகியோர் ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு புனேயில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். திடீரென நவம்பர் 14 அன்று, அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் முடிவில், தனியார் மருத்துவமனையில் சக ஊழியராக இருந்த நர்ஸ் ஒருவருடன் சாவந்த் தொடர்பு கொண்டிருந்தார் என்றும், அவரை திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்தார் என்றும் பாட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மனோஜ் யாதவ் தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய அவர், “ சாவந்த் தான் பணிபுரிந்த மருத்துவமனையில் இருந்து வெக்குரோனியம் புரோமைடு, நைட்ரோகிளிசரின் ஊசி மற்றும் லாக்ஸ் 2% உள்ளிட்ட சில மருந்துகள் மற்றும் ஊசிகளை திருடி, தனது மனைவியைக் கொன்றது தெரிய வந்துள்ளது. பிரியங்கா கையெழுத்திட்டதாகக் கூறப்படும் தற்கொலைக் குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. சாவந்த் மீது குடும்ப வன்முறை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்று இன்ஸ்பெக்டர் மனோஜ் யாதவ் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in