மனைவி, மகள் உயிருடன் எரிப்பு.. தற்கொலை செய்த கணவன்: உயிர் தப்பிய மூத்த மகள்!

மனைவி, மகள் உயிருடன் எரிப்பு..  தற்கொலை செய்த கணவன்: உயிர் தப்பிய மூத்த மகள்!

மலப்புரம் அருகே மனைவி மற்றும் மகளைத் தீ வைத்து எரித்துக் கொன்ற கணவன் தானும் தீவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பொட்டிபுரம் பகுதியை அடுத்த பெருந்தலமன்னா கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது(52). இவரது மனைவி ஜாஸ்மின்(37). இந்த தம்பதிகளுக்கு மூன்று பெண் குழந்தைகள். இந்த நிலையில் நேற்று தனது மனைவி, 2 மகள்கள் ஆகியோரை சரக்கு வாகனத்தில் வைத்து முகமது தீ வைத்து கொளுத்தினார். இதில் முகமது மனைவி ஜாஸ்மின் மற்றும் 11 வயது மகள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், தானும் தீயை வைத்துக் கொண்ட முகமது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் எரிந்து கொண்டிருந்த சரக்கு வாகனத்தில் இருந்த ஐந்து வயது குழந்தையை ஜாஸ்மினின் சகோதரி காப்பாற்றி கோழிக்கோடு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தீயணைப்புத்துறையினர் வந்து வாகனத்தில் பற்றிய தீயை அணைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்த போது அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியானது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "ரம்ஜான் தொடங்கியதில் இருந்து முகமதுவிற்கும், அவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. இந்த நிலையில்தான் மனைவி, மகள்களை வாகனத்திற்குள் வைத்துப் பூட்டி பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார். வாகனத்தை எரிக்க முகமது வெடிமருந்தையும் பயன்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது. ஜாஸ்மினின் சகோதரி, ஒரு குழந்தையைக் காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவத்தின் போது வாகனத்தில் ஏற மறுத்ததால் முகமதுவின் 19 வயது மகள் உயிர் தப்பியுள்ளார்" என்று கூறினர்.

மேலும், " காசர்கோட்டில் 2020 நவம்பர் 28-ம் தேதி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக முகமது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் 200 நாட்கள் முகமது சிறையில் இருந்துள்ளார். இதன் பின் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் தான், தன் குடும்பத்தை ஒட்டு மொத்தமாக கொலை செய்து தானும் தற்கொலை செய்ய முகமது முயற்சி செய்தாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" என்று கூறினர். உயிருடன் மனைவி, மகளை எரித்துக் கொன்று கணவன் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் மலப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in