குடும்பச் சண்டையில் குழந்தைகயின் கண் முன் தன் மனைவியை ஸ்குரு டிரைவரால் ஆட்டோ ஓட்டுநர் குத்திக் கொலை செய்த சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் தலைநகரான அகமதாபாத்தைச் சேர்ந்தவர் அஹேஜான் கான்(26). ஆட்டோ ஓட்டுரான இவர் ரமோலில் உள்ள ஷாலிமாரில் மனைவி குரேஷாபானுடன் வசித்து வந்தார். இந்த தம்பதிகளுக்கு 4 முதல் 13 வயது வரையிலான 4 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதியில் இருந்து அஹேஜான் கான் அகமதாபாத்திற்கு குடிபெயர்ந்தார்.
இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்துள்ளது. குரேஷாபானுவின் 5 சகோதரர்களும் அதே பகுதியில் வசித்து வந்தனர். குரேஷாபானு குடும்பத்தில் தகராறு ஏற்படும் போது இவர்கள் தலையிட்டு தீர்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தனது குழந்தைகள் கண் முன்பு, மனைவி குரேஷாபானுவை ஆட்டோவில் இருந்த ஸ்குரு டிரைவரால் அஹேஜான் கான் சரமாரியாக குத்தினார். அத்துடன் தலையிலும் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் குரேஷாபானு மயங்கி விழுந்தார்.
இதைப் பார்த்த குழந்தைகள் அலறியடித்துக் கொண்டு தங்களது தாய்மாமன்கள் வீட்டிற்குச் சென்று தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து குரேஷாபானுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இக்கொலை குறித்து போலீஸில் குரேஷாபானுவின் குடும்பத்தினர் புகார் செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அஹேஜான் கான் இன்று போலீஸில் சரணடைந்தார். அவர்மீது வழக்குப் பதிவு செய்து கொலைக்காரன காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்