காதல் மனைவி கொலை... 7 மாதங்களாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவந்த பொக்லைன் ஆபரேட்டர் கைது!

வாசன்
வாசன்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே, காதல் மனைவியை அடித்துக் கொன்ற கணவர் 7 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மாமலைவாசம் - அபிநயா வசித்த வீடு
மாமலைவாசம் - அபிநயா வசித்த வீடு

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது கஸ்பா ஆலம்பாடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாமலைவாசன் -அபிநயா தம்பதி. பொக்லைன் ஆபரேட்டரான மாமலைவாசன், திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த அபிநயாவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 -ம் தேதி அபிநயா அவரது வீட்டில் ரத்தக்காயங்களுடன் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்து வந்த அபிநயாவின் தந்தை, தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த அபிநயாவின் கணவர் மாமலைவாசனை தேடி வந்தனர். இதனிடையே, அபிநயாவின் பிரேதபரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் அடிபட்ட காயங்கள் இருந்ததாகவும், அதனாலும் மரணம் சம்பவித்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கைது
கைது

இந்த நிலையில், மாதக் கணக்கில் தலைமறைவாக இருந்த மாமலைவாசன், போலீஸ் இந்த வழக்கை மறந்திருப்பார்கள் என்ற நினைப்பில் இன்று காலை சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார். இதுபற்றி ஊர் மக்கள் உடனடியாக போலீஸாருக்கு துப்புக் கொடுத்ததை அடுத்து அங்கு வந்த போலீஸார், வாசனை சுற்றிவளைத்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், குடிபோதையில் மனைவி அபிநயாவிடம் தகறாறு செய்ததாகவும் அப்போது வாக்குவாதம் முற்றி அவரை தாக்கியதாகவும், அதனால் அவர் பலத்த காயமடைந்து இறந்துவிட்டதாகவும் மாமலைவாசன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீஸார், மாமலைவாசனை கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in