பகீர்... மனைவியைக் கொன்று உடலை ஆற்றில் வீசிய கணவர்!

தர்மேந்திரா
தர்மேந்திரா
Updated on
1 min read

ஹரியாணாவில் குடிபோதையில் மனைவியைக் கொலை செய்து உடலை யமுனை ஆற்றில் வீசிய கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலம், ஃபரிதாபாத்தில் உள்ள சிக்ரி கிராமத்தில் வசித்து வந்தவர் தர்மேந்திரா. இவர் கடந்த ஒரு வருடமாக பெண்ணுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஆக.19-ம் தேதி அந்த பெண்ணைக் காணவில்லை என்று அவரது தந்தை போலீஸில் புகார் செய்தார். அந்த நாளில் இருந்து தர்மேந்திராவும் காணாமல் போனார். இதுதொடர்பாக தனிப்படை அமைத்து போலீஸார் தர்மேந்திராவைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், தர்மேந்திராவை போலீஸார் நேற்று நள்ளிரவு பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மனைவியை ஆக.16-ம் தேதி கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக கூறியதால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரைக் கொலை செய்த பிறகு ஒரு வாடகை ஆட்டோவை தர்மேந்திரா பிடித்துள்ளார். தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவளை யமுனை நதி ஓடும் மோகனா பாலத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதை நம்பி ஆட்டோ ஓட்டுநரும் தர்மேந்திராவையும், அவரது மனைவியையும் அழைத்துச் சென்றுள்ளார். இதன் பின் அந்த பாலத்தில் இருந்து மனைவியின் உடலை யமுனை ஆற்றில் தர்மேந்திரா வீசியதாக கூறினார். இதையடுத்து அவரை நான்கு காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில்," உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த தர்மேந்திரா சில ஆண்டுகளுக்கு முன் ஹரியாணா மாநிலம், ஃபரிதாபாத் வந்துள்ளார். அப்போது ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கணவன், மனைவியாக இணைந்து வாழ்ந்துள்ளார்.

குடித்து விட்டு வந்து அடிக்கடி அந்த பெண்ணை தர்மேந்திரா அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்த நிலையில் குடிபோதையில் அந்த பெண்ணைக் கொன்று யமுனை ஆற்றில் வீசியுள்ளார். அப்பெண்ணின் உடலைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in