
காஞ்சிபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்துள்ளதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதமலம் கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து பல மாதங்களான பின்னரும் குற்றவாளிகள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது பள்ளிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் மலத்தை கலந்து சிலர் சாதிய வன்மத்தை வெளிப்படுத்தி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே திருவந்தார் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க சென்ற போது, துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அங்கு வந்த போலீஸார் குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்ற உத்தரவிட்டனர்.
தொடர்ந்து குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யவும் வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், திருவந்தார் கிராம மக்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பனைகுளம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தலைமை ஆசிரியர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற பாப்பாரப்பட்டி போலீஸார் மற்றும் பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
மேலும் மற்றொரு பள்ளியில் சத்துணவு தயார் செய்யும் இடத்தில் மர்ம நபர்கள் மலத்தைக் கொட்டி வைத்திருந்தனர். இந்த நிலையில் அரசு பள்ளியில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ப்பா... கிளாமரில் தெறிக்க விட்ட தமன்னா
நெகிழ்ச்சி... சாவிலும் இணைபிரியாத அக்கா, தம்பி!
அடுத்த சர்ச்சை... தேசிய கீதத்தை அவமானப்படுத்திய மன்சூர் அலிகான்!
மன்சூர் அலிகான் தப்புன்னா... ரஜினி பேசுனதும் தப்பு தான்!
அடாவடி வசூல்... கழிவறை கட்டண குத்தகைதாரருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து தீர்ப்பு!