அதிர்ச்சி... வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி... காதலனின் வீட்டை தீ வைத்து எரித்த கும்பல்!

தீ
தீ

ஜோலார்பேட்டை அருகே காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறிய ஆத்திரத்தில், பெண்ணின் உறவினர்கள், வாலிபரின் வீட்டை தீவைத்துக் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (25) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்ணும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் காதலர்கள் ரகசியமாக சந்தித்து வந்துள்ளனர்.

இதை அறிந்த பெற்றோர், இரண்டு பேரையும் கண்டித்ததோடு, காதலுக்கு கடும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை விஜய் மற்றும் இளம் பெண் திடீரென வீட்டை விட்டு வெளியேறினர்.

தீயில் எரிந்து நாசமான வீடு
தீயில் எரிந்து நாசமான வீடு

பெண்ணின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் பெண் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், விஜயின் வீட்டை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதனைக் கண்ட பகுதி மக்கள் உடனடியாக ஜோலார்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து நாசமானது. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in