லாரி டிரைவர்களை தாக்கி கொள்ளை! விபத்தில் சிக்கிய கொள்ளையர்கள்!

மூன்று பேர் கைது
மூன்று பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் செல்லும் லாரிகளை மடக்கி, டிரைவர்களை கட்டையால் கடுமையாக தாக்கி பணம் மற்றும் செல்போன்களை பறித்துச் சென்ற மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஜூஜுவாடி சோதனை சாவடி
ஜூஜுவாடி சோதனை சாவடி

ஓசூர் அருகே உள்ள ஜூஜுவாடி சோதனை சாவடி அருகே ஓசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஏராளமான லாரிகள் அவ்வப்பொழுது நிறுத்தப்பட்டிருக்கும். இந்நிலையில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள், அங்கு லாரிகளில் தூங்கிக் கொண்டிருக்கும் லாரி டிரைவர்களை கட்டையால் கடுமையாக தாக்கி அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் ரொக்க பணம் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்து போலீஸாரிடம் பாதிக்கப்பட்ட லாரி டிரைவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகே உள்வட்ட சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் விபத்தில் சிக்கி உள்ளனர். இதை அடுத்து அவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் லாரி டிரைவர்களை தாக்கி பணம் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது இந்த மூவர் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, சரத்குமார்(24), நவீன்(21) மற்றும் சக்திவேல்(20) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in