நேருக்கு நேர் பயங்கரமாக மோதிய கார்கள்; முதியவர் பலி: டாக்டர் உள்பட 3 பேர் படுகாயம்!

விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை மேம்பாலம் பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அரசு மருத்துவர் உட்பட 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் சிதைந்த கார்.
விபத்தில் சிதைந்த கார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த மூன்று பேர் ஒரு ஆம்னி காரில் சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்செங்கோடு நோக்கி சென்று இன்று கொண்டிருந்தனர். அந்த கார் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை சாலை மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரில் சின்னசேலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த ஒரு கார் மீது மோதியது.

இதில் ஆம்னி காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த நிலையில் அந்த காரில் பயணம் செய்த முதியவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் அவருடன் வந்த திருச்செங்கோட்டை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் காரில் பயணம் செய்த உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் சின்னசேலத்தைச் சேர்ந்த மகேஸ்வரி, அவரது கணவரான அரசு கலைக் கல்லூரி விரிவுரையாளர் ஞானமூர்த்தி ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மூன்று பேரும் ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

நொறுங்கிய கார்
நொறுங்கிய கார்

அங்கு மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவர் மகேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேரை மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்குள்ளான வாகனங்கள் உளுந்தூர்பேட்டை சேலம் நான்கு வழி சாலையில் கிடந்ததால் அந்த வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அதேபோல் விபத்துக்குள்ளான ஆம்னி காரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தீயணைப்பு வீரர்களை வரவழைத்தனர். அவர்கள் வந்து கியாஸ் கசிவு ஏற்பட்ட ஆம்னி காரில் தண்ணீரை பீய்த்து அடித்து கியாஸ் கசிவை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் உளுந்தூர்பேட்டை- சேலம் புறவழி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் எலவனாசூர்கோட்டை இணைப்பு சாலை வழியாக திருப்பி விடப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

நாளை தமிழகத்திற்கு 'ஆரஞ்சு' அலர்ட்!

திமுக அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான 40 இடங்களில் ரெய்டு!

சிறையில் இனி கைதிகளைப் பார்க்க ஆதார் கட்டாயம்!

இன்று 11 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை!

குட்நியூஸ்: இன்று முதல் 600 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு முடிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in