துபாயில் 500 கோடி ரூபாய் பதுக்கல்... ஆர்.கே.சுரேஷுக்கு மீண்டும் சம்மன்!

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம், ஆர்.கே.சுரேஷ்.
ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம், ஆர்.கே.சுரேஷ்.

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன மோசடி வழக்கில் மோசடி செய்த 500 கோடி ரூபாயை துபாயில் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துபாயில் பதுங்கியுள்ள நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம்
ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம்

சென்னை அமைந்தக்கரையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் செயல்பட்டு வந்தது. பொதுமக்களிடம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி 2438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கடந்த ஆண்டு இந்நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அதில் 22 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.ஆனால், இவ்வழக்கில் முக்கிய இயக்குநர்களான ராஜசேகர், அவரது மனைவி மகாலட்சுமி, மைக்கேல் ராஜ், நடிகர் ஆர்.கே சுரேஷ் ஆகியோர் துபாயில் தலைமறைவாகி இருப்பதால் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அவர்களை பிடிக்க ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

மேலும் மோசடி செய்யப்பட்ட பணத்தை துபாய் நாட்டில் பதுக்கி வைத்திருப்பதால் அதை மீட்க துபாய் நாட்டு அரசாங்கத்துடன் எம்.லாட் எனும் பரஸ்பர ஒப்பந்தம் அடிப்படையில் மத்திய அரசு மூலமாக கடிதம் அனுப்பி உள்ளனர்.

ஆர்.கே.சுரேஷ்
ஆர்.கே.சுரேஷ்

இந்நிலையில் மோசடி செய்யப்பட்ட 500 கோடி ரூபாயை துபாய் நாட்டில் பதுக்கி வைத்திருப்பதை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.மேலும் எம்.லாட் ஒப்பந்தத்தில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாததால் உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளனர்.

மேலும் இவ்வழக்கில் இதுவரை மோசடி செய்யப்பட்ட பணம் மூலம் வாங்கப்பட்ட 127 சொத்துக்களைக் கண்டறிந்து, அதில் 60 சொத்துக்களை முடக்கி உள்ளதுடன் 102 கோடி வங்கி கணக்கை முடக்கி, 6.5 கோடி பணம் மற்றும் 6 கிலோ தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் நடிகர் ஆர்.கே சுரேஷ் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in