மத உணர்வைத் தூண்டியதாக இந்து மகாசபா மாநிலத் தலைவர் கைது

மத உணர்வைத் தூண்டியதாக இந்து மகாசபா மாநிலத் தலைவர் கைது

இந்துமதத்தை மிகத்தீவிரமாக முன்னெடுத்துவரும் அகில பாரத இந்து மகாசபாவின் மாநிலத் தலைவர் த.பாலசுப்பிரமணியின் இன்று கைது செய்யப்பட்டார். இவர் பாஜகவுக்கு எதிராகவும் இந்துக்களை ஒருங்கிணைத்தவர் என்பது இதில் குறிப்பிடத்தக்க விசயம் ஆகும்.

அகில பாரத இந்து மகாசபாவின் தமிழகத் தலைவராக இருப்பவர் த.பாலசுப்பிரமணியன். அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது இந்த அமைப்புதான். ஆனால் தீர்ப்பின் வெற்றியை பாஜகவே உரிமை கொண்டாடிவிட்டதாக தொடர்ந்து பாஜகவை விமர்சிப்பதோடு, பாஜகவுக்கு எதிராக இந்துக்கள் வாக்குகளை ஒருங்கிணைத்து தேர்தலையும் அகில பாரத் இந்து மகாசபா சந்தித்து வருகின்றது. தொடர்ந்து மத ரீதியாக இயங்கிவருவதால் த.பாலசுப்பிரமணியனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் உண்டு.

இந்நிலையில் இந்து மகாசபா மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி காவல்நிலைய ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இருந்த அவரது வீட்டில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். தனிப்படை போலீஸார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடந்த 17-ம் தேதி, குமரிமாவட்டம் காப்புக்காடு பகுதியில் நிர்வாகிகள் கூட்டத்தில் த.பாலசுப்பிரமணியன் மத உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக தக்கலை டி.எஸ்.பி கணேசன், புதுக்கடை காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதன்பேரிலேயே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புதுக்கடை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்கள் அவரைக் கைதுசெய்தனர். இதைத் தொடர்ந்து அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் குமரியில் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

Related Stories

No stories found.