எல்லையில் அதிர்ச்சி... ட்ரோனில் 21 கோடி ரூபாய் ஹெராயின் கடத்த முயற்சி!

ஹெராயினுடன் பறிமுதல் செய்யப்பட்ட ட்ரோன்.
ஹெராயினுடன் பறிமுதல் செய்யப்பட்ட ட்ரோன்.

பஞ்சாப்பில் ட்ரோன் மூலம் கடத்தப்பட இருந்த 21 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாய் மாநிலம், ஃபெரோஸ்பூர் மாவட்ட சர்வதேச எல்லையில், ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) பயன்படுத்தி ஹெராயின் கடத்தப்படுவதாக எல்லைப் பாதுகாப்பு படைக்கு(பிஎஸ்எஃப்) தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹசாரா சிங் வாலா கிராமத்தின் புறநகரில் நேற்று இரவு பிஎஸ்எஃப், பஞ்சாப் போலீஸார் இணைந்து ஹெராயின் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது ஹசாரா சிங் வாலா கிராத்து வயலில் ஒரு ட்ரோனை கண்டுபிடித்தனர். அப்போது ஆரஞ்சு நிற பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட 3.4 கிலோ ஹெராயின் கட்டப்பட்ட நிலையில் உடைந்த ட்ரோனுடன் கிடந்தது. ட்ரோன் மூலம் கடத்த முயன்ற ஹெராயின் மதிப்பு சர்வதேச அளவில் 21 கோடி ரூபாயாகும்.

இந்த ஹெராயின் சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 5 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in