ஹெல்மெட் அணிந்து விலை உயர்ந்த செல்போன்களை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்: கடை ஓனர் அதிர்ச்சி

ஹெல்மெட் அணிந்து விலை உயர்ந்த செல்போன்களை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்: கடை ஓனர் அதிர்ச்சி

கேரள மாநிலம், அமரவிளையில் செல்போன் கடைக்குள் நள்ளிரவில் ஹெல்மெட் அணிந்து புகுந்த கும்பல் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களைத் திருடிச் சென்றது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரல் ஆகிவருகின்றது.

தமிழக- கேரள எல்லையோர பகுதியான கேரளத்தின், பாறசாலையை அடுத்த அமரவிளை பகுதியில் தனியார் மொபைல் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விலை உயர்ந்த மொபைல் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இரவு கடையின் உரிமையாளர் வியாபாரம் முடிந்து கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

காலை மீண்டும் கடையை திறக்க வந்தபோது கடையின் ஷட்டர்கள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர் கடைக்குள் சென்று பொருட்களை சரி பார்த்தபோது சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தில் தலையில் ஹெல்மட் அணிந்தபடி வந்த இருவர் கடைக்குள் புகுந்து பொருட்களை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனையடுத்து கடையின் உரிமையாளர் பாறசாலை போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் பாறசாலை போலீஸார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி திருட்டில் ஈடுப்பட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் திருட்டு குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in