அதிகாலையில் வெடித்த கடும் மோதல்: காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை!

அதிகாலையில் வெடித்த கடும் மோதல்: காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்டரில், தடைசெய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

இன்று அதிகாலையில் எல்லைப்பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே கண்டிபோரா பகுதியில் ஏற்பட்ட மோதலின்போது இந்த என்கவுன்டர் சம்பவம் நடந்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் நடந்த மற்றொரு மோதலின்போது, ஜம்மு காஷ்மீர் காவல்துறையுடன் இந்திய ராணுவம் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் இரண்டு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 சீனத் துப்பாக்கிகள், 18 தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரில் நடந்த இந்த சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in