விசாரணைக்கு சென்ற இடத்தில் பாலியல் கொடுமை: ஏட்டு இடைநீக்கம்!

விசாரணைக்கு சென்ற இடத்தில் பாலியல் கொடுமை: ஏட்டு இடைநீக்கம்!

வழக்கு விசாரணைக்கு சென்ற இடத்தில் பெண்ணை மிரட்டி பாலியல் கொடுமை செய்த போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் முத்துப்பாண்டி. தனது மனைவி காணாமல் போனதாக உள்ளூரை சேர்ந்த ஒருவர், குன்னத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை ஏட்டு முத்துப்பாண்டி விசாரித்து வந்தார்.

முத்துப்பாண்டியின் விசாரணையில் அந்த பெண் இன்னொரு ஆணுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது. அங்கு சென்று அப்பெண்ணை விசாரணைக்கு அழைத்த ஏட்டு, பிறிதொரு இடத்துக்கு கொண்டு சென்று மிரட்டி பாலியல் கொடுமை செய்துள்ளார். மேலும் இதனை வெளியில் சொல்லக்கூடாது என்றும் அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.

முத்துப்பாண்டியின் தொந்தரவு தொடரவே, காவல்துறை உயரதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். விசாரணையில் அப்பெண் கூறியது உண்மை என தெரிய வந்ததை அடுத்து, ஏட்டு முத்துப்பாண்டியை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in