அதிர்ச்சி... விமான நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபரால் விமானங்கள் ரத்து!

ஹாம்பர்க் விமான நிலையத்திற்குள் காரில் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு
ஹாம்பர்க் விமான நிலையத்திற்குள் காரில் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு

ஜெர்மனி நாட்டின் ஹாம்பர்க் விமான நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் புகுந்ததால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி நாட்டின் ஹாம்பர்க் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் காரில் பாதுகாப்பு தடுப்புகளை மீறி நுழைத்துள்ளார். அவரது கையில் துப்பாக்கி வைத்திருந்த நிலையில், தரையிறங்கிய விமானங்கள் பெட்ரோல் நிரப்பும் இடத்திற்கு அவர் காரை ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் உடனடியாக விமான நிலையத்தை சூழ்ந்துள்ளனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு கருதி அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிப்பு
விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிப்பு

இந்த மர்ம நபரின் காரில் 2 குழந்தைகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவர், குழந்தைகளை வீட்டிலிருந்து கடத்தி வந்து, விமான நிலையத்தில் முற்றுகையிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதோடு, பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டு இருப்பதால் பயணிகளிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.

ஜெர்மனியின் ஹாம்பர்க் விமான நிலையம்
ஜெர்மனியின் ஹாம்பர்க் விமான நிலையம்

இதையடுத்து காரில் விமான நிலையத்திற்குள் நுழைந்த நபரை பிடிக்கும் பணியில் பாதுகாப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in