கேரள குண்டுவெடிப்புக்கும் ஹமாஸுக்கும் தொடர்பு... மத்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு!

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
Updated on
1 min read

கேரள குண்டுவெடிப்பிற்கும் ஹமாஸுக்கும் தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியானது. குண்டு வெடித்த பின்பு, தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. தகவலறிந்த பின், தீயணைப்பு மீட்புக் குழுவினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தவிரப்படுத்தினர். விசாரணையில், களமசேரியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் IED(Improvised Explosive Device) ரக குண்டு பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு டிபன் பாக்ஸில் ஐஇடி வைத்திருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன என கேரள டிஜிபி தெரிவித்துள்ளார்.

கேரளா குண்டு வெடிப்பு
கேரளா குண்டு வெடிப்பு

இந்நிலையில், கேரளாவில் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்பட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் விசாரணை மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,'காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகளின் சமாதான அரசியலின் விலையை சமூகத்தின் அப்பாவி மக்களே சுமக்க வேண்டியுள்ளது. வரலாறு அதை தான் நமக்கு கற்று கொடுத்திருக்கிறது. வெட்கக்கேடான அரசியல் - காங்கிரஸ்/சிபிஎம்/ஐக்கிய கூட்டணி/ இந்தியா கட்சிகள், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக கேரளாவில் வெறுப்பை பரப்புகின்றன. பொறுப்பற்ற முட்டாள்தனமான அரசியல்' இவ்வாறு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in