ஆற்றில் மீன் பிடித்த சிறுவர்களிடம் சிக்கிய துப்பாக்கி தோட்டாக்கள்; போலீசார் விசாரணை!

ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்கள்
ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்கள்

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் சிறுவர்கள் இறால் பிடிக்கும் போது துப்பாக்கி தோட்டாக்கள் சிக்கியது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் நேற்று சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு சிறுவர்கள் சிலர் கைகளால் இறால் பிடித்தனர். அப்போது ஒரு சிறுவன் கையில் சில தோட்டாக்கள் கிடைத்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் அந்த தோட்டாக்களை ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, அந்த தோட்டாக்கள் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா ராம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஏர் பிஸ்டல் மற்றும் ரிவால்வர்களில் பயன்படுத்தக்கூடிய வகையிலான தோட்டக்கள் அவை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கடலூா் டிஎஸ்பி பிரபு தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், தோட்டாக்கள் கிடைத்த இடத்தில் சோதனை செய்தனர். அப்போது, நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட தோட்டாக்கள் கிடைத்தன. இவற்றை கைப்பற்றி எஸ்.பி. அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். இதேபோல் கடந்த மாதம் ஏர் பிஸ்டல் ஒன்று சிறுவர்கள் மீன் பிடித்த வலையில் அதே இடத்தில் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in