
குஜராத்தில் சிக்னல் கோளாறால் நின்ற ரயிலில் பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், கெடா மாவட்டத்தில் இருந்து மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரை நோக்கி காந்திதம் - இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அங்கதி என்ற கிராமத்திற்கு வெளியே, அந்த ரயில் அதிகாலை 2 மணியளவில் நின்று கொண்டிருந்தது.
சிக்னல் கோளாறு காரணமாக ரயில் நின்றதாக கூறப்படுகிறது. அப்போது, அப்பகுதி முழுவதும் மிகவும் இருள் சூழ்ந்து இருந்தது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் சிலர், ஜன்னலோரம் அமர்ந்திருந்த பணிகளின் பைகள் மற்றும் பர்சுகளை திருடுவிட்டு தப்பிச்சென்றனர்.
ரயில் உள்ளே ஏறாமல் ஜன்னலோர பயணிகளிடம் மட்டும் கைவரிசையை அவர்கள் காட்டியுள்ளனர். இதுகுறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தனிப்படை அமைத்துள்ள போலீஸார், திருட்டில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.
மேலும், உண்மையாகவே சிக்னல் கோளாறு ஏற்பட்டதா அல்லது கொள்ளையர்களின் திட்டத்தின் ஒரு பகுதியாக ரயில் நிறுத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 3.2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள், பணம் கொள்ளை அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.