ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு... பொள்ளாச்சி பிரபல நகைக்கடையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு!

பொள்ளாச்சியில் பிரபல லட்சுமி ஜுவல்லரி நகைக்கடையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் ஆய்வு
பொள்ளாச்சியில் பிரபல லட்சுமி ஜுவல்லரி நகைக்கடையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் ஆய்வு

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தொடர்பாக பொள்ளாச்சியில் உள்ள பிரபல நகைக்கடையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கடைவீதியில் பிரபு என்பவருக்கு சொந்தமான லட்சுமி ஜூவல்லரி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. பல தலைமுறைகளாக இந்த கடை பொள்ளாச்சியில் செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஜிஎஸ்டி வரி செலுத்து வதில் வரி ஏய்ப்பு நடைபெற்றதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் ஜிஎஸ்டி நுண்ணறிவு புலனாய்வு துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அங்கு அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

3 குழுக்களாக வந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை
3 குழுக்களாக வந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

மூன்று குழுக்களாக வந்த அதிகாரிகள் இன்று காலை முதல் நகைக் கடையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து சோதனை நடந்து வருவதால் கடைக்குள் யாரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இந்த சோதனையானது தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது. இதனால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி கடைவீதி
பொள்ளாச்சி கடைவீதி

நாளை அட்சய திரிதியை தினத்தை முன்னிட்டு, நகைகளுக்கு ஆர்டர் கொடுக்க பலரும் ஆர்வமாக நகைக்கடைக்கு வந்தனர். ஆனால் அதிகாரிகள் அவர்களை அனுமதிக்காததால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர். மாலை வரை இந்த ஆய்வு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!

கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in