
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசு பள்ளியில் படித்து வந்த மாணவிகள் இருவர் காணாமல் போயிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த, சேகாம்பாளையத்தை சேர்ந்த வேலாயுதம் மகள் அபிபாரதி(14) மற்றும் ஞானமூர்த்தி மகள் கவுரி (14). இவர்கள் இருவரும், சேகாம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கின்றனர்.
கடந்த அக்.,26 ம் தேதி அன்று பள்ளிக்கு செல்வதற்காக தங்கள் வீடுகளில் இருந்து கிளம்பிச் சென்றவர்கள் அன்று மாலை பள்ளி முடிந்ததும் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பள்ளியில் ஏதாவது சிறப்பு வகுப்புகள் இருக்குமோ என்று நினைத்த பெற்றோர் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் விசாரித்தபோது தான் அவர்கள் அன்று பள்ளிக்கே வரவில்லை என்பது தெரிய வந்தது.
இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து உடனடியாக வழக்கு பதிவு செய்து பல்லடம் போலீஸார் மாணவிகளை தேடி வருகின்றனர். இதுகுறித்த பல்லடம் போலீஸாரின் விசாரணையில் மாணவிகள் அபிபாரதி, கவுரி உட்பட இவர்களது தோழிகள் யாமினி, ராஜஸ்ரீ, ஆகிய நான்கு பேரும் வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுச் சென்ற நிலையில், பள்ளிக்குச் செல்லாமல் யாமினியின் வீட்டில் இருந்துள்ளனர். சிறிது நேரம் கழித்து ராஜஸ்ரீ பள்ளிக்குச் செல்ல, யாமினி வீட்டிலேயே இருந்துள்ளார்.
அபி பாரதியும், கவுரியும் அதன்பின் வெளியே சென்றுள்ளார்கள். அவர்கள் பள்ளிக்கும் வரவில்லை. வீட்டுக்கும் திரும்பவில்லை என்பது தெரியவந்தது. மாயமான மாணவிகளை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அடுத்த அதிர்ச்சி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது பாட்டில், கல்வீச்சு!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்... ரூ.20 கோடி கேட்டு பரபரப்பு!
பிக் பாஸ் வீட்ல இந்த கூத்தெல்லாம் நடக்குது... உண்மையை போட்டுடைத்த முன்னாள் போட்டியாளர்!