திடீர் நெஞ்சுவலி: 70 பயணிகளின் உயிரைப் பாதுகாத்த அரசு பேருந்து ஓட்டுநர்!
புதுக்கோட்டை அருகே அரசு பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட போதும், 70 பயணிகளின் உயிரைப் பாதுகாத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதனை திருவையாறு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் வீரமணி ஓட்டி வந்தார். 70 பயணிகள் பேருந்தில் இருந்த நிலையில், தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை வருவதற்குள் வீரமணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இருப்பினும் மருந்தகத்தில் நிறுத்தி மருந்து வாங்கி சாப்பிட்டு விட்டு மீண்டும் பேருந்தை மதுரை நோக்கி இயக்கியுள்ளார்.

இருப்பினும், வீரமணிக்கு நெஞ்சுவலி சரியாகாததால் வரும் வழியில் பேருந்தை நிறுத்திவிட்டு, நடத்துநர் உதவியுடன் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பேருந்தில் பயணித்த 70 பயணிகளும் மாற்று பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வீரமணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை வருவதற்குள் 2 முறை நெஞ்சுவலி ஏற்பட்டும், பேருந்தை நிறுத்தாமல், விபத்தின்றி பயணிகளைப் பத்திரமாக அழைத்து வந்த ஓட்டுநரின் செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!
வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஐயப்பனுக்கு தங்க அங்கி.. சபரிமலையில் இன்று நடை திறப்பு!
செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!