அதிர்ச்சி... சாலையில் திடீரென பற்றி எரிந்த அரசுப் பேருந்து... அலறியடித்து தப்பி ஓடிய பயணிகள்!

கோவை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த அரசுப்பேருந்து
கோவை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த அரசுப்பேருந்து

சேலத்திலிருந்து கோவைக்கு நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக பயணிகள் அனைவரும் இறங்கியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

சேலத்திலிருந்து கோவை நோக்கி அரசுப்பேருந்து ஒன்று பயணிகளுடன் இன்று மதியம் கிளம்பியது. பேருந்தில் 67 பயணிகள் பயணித்தனர். மாலை 4 மணியளவில், கருமத்தம்பட்டி அருகே எலச்சிபாளையம் அருகே வந்த போது, எஞ்சினின் முன்புறம் புகை வந்தது.

இதைக் கண்ட ஓட்டுநர் சிவகுமார் மற்றும் நடத்துநர் ராஜா ஆகியோர் சந்தேகமடைந்து பேருந்தை நெடுஞ்சாலை மேம்பாலத்தின் ஓரத்திலேயே நிறுத்தி பேருந்தை சோதனையிட்டுள்ளனர்.

பற்றி எரிந்த அரசுப் பேருந்து
பற்றி எரிந்த அரசுப் பேருந்து

அப்போது தீப்பிடித்திருப்பது தெரியவந்ததால், உடனடியாக பயணிகள் அனைவரையும் இறங்குமாறு எச்சரித்துள்ளனர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கீழே இறங்கி பாதுகாப்பான தூரத்திற்கு ஓடி உயிர்தப்பினர்.

தீப்பற்றி எரிந்த அரசுப்பேருந்து
தீப்பற்றி எரிந்த அரசுப்பேருந்து

இதனிடையே தீ மளமளவென பரவி, பேருந்து முழுவதும் கொளுந்து விட்டு எரியத்துவங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. மேலும், அவ்வழியே சென்ற வாகனங்களும், ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த அரசுப்பேருந்து
கோவை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த அரசுப்பேருந்து

தகவலறிந்து சூலூரிலிருந்து தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர். இருப்பினும் அதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து கரிக்கட்டையாக மாறியது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in