காரை தட்டித் தூக்கிய ஓட்டுநர்... துரத்திப் பிடித்த பெண்... நடுரோட்டில் நின்ற அரசு பேருந்து!

அரசு பேருந்து
அரசு பேருந்து

மதுபோதையில் அரசு பேருந்தை ஓட்டிச் சென்று கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். போலீஸுக்கு தகவல் அளித்ததும் நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பி ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கொளத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் தீபா(39). இவர் மைலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை தீபா வழக்கம் போல் தனது காரில் வேலைக்கு அண்ணாநகர் வழியாக சென்று கொண்டிருந்தார். அண்ணாநகர் 3&4வது பிரதான சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது எம்கேபி நகரில் இருந்து கோயம்பேடு நோக்கி மாநகர பேருந்து (தடம் எண் 46G) சென்று கொண்டிருந்தது. அப்போது தீபா ஹார்ன் அடித்து காருக்கு வழிவிடுமாறு கேட்டுள்ளார். ஆனால் பேருந்து ஓட்டுநர் இதனை காதில் வாங்காமல் வழிமறித்து சென்றதால் தீபா பேருந்தை முந்தி செல்ல முயன்றுள்ளார்.

உடனே பேருந்து ஓட்டுநர் தீபாவின் கார் கண்ணாடி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றதால் தீபா, முந்தி சென்று பேருந்து முன்பாக காரை நிறுத்தி ஓட்டுநரை கீழே இறங்கும்படி கூறி தகராறில் ஈடுபட்டார். அப்போது ஓட்டுநர் மது போதையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த தீபா, உடனே அருகில் இருந்த பெண் காவலரிடம் சென்று நடந்த சம்பவத்தை கூறி அழைத்து வந்தார். போலீஸ் வருவதை அறிந்து கொண்ட ஓட்டுநர் நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி விட்டு தப்பி சென்றார்.

பின்னர் தீபா புகாரின் பேரில் அண்ணாநகர் போலீஸார் பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன் பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்து விட்டு பேருந்து நடத்துனர் பாலாஜியை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணை தப்பி ஓடிய பேருந்து ஓட்டுநர் தேவராஜ் என்பதும் மதுபோதையில் பேருந்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மதுபோதையில் பேருந்தை ஓட்டி சென்ற ஓட்டுநர் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in