
ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் கைதிகளின் பல் பிடுங்கி சித்ரவதை செய்வதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அருண்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இந்த விவகாரம் தொடர்பாக மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘’அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பொய்யான வழக்குப்பதிவு செய்து, சட்ட விரோத காவலில் வைத்த காவல்துறை தன்னை கடுமையாக தாக்கினர். அப்போது தன்னுடைய 4 நான்கு பற்கள் உடைக்கப்பட்டன. இதில் தான் மட்டுமன்றி விசாரணை கைதிகள் சிலரது பற்களை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பிடுங்கி சித்ரவதை செய்தார். அதைத் தொடர்ந்து தன்னை காவலர்கள் சிறையில் அடைத்தனர்.
தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறை குற்றப்பத்திரிகை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும். அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மார்ச் 10 அன்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனக்கு வழங்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை அதிகாரியான அமுதா மற்றும் திருநெல்வேலி சார் ஆட்சியர் விசாரணை அறிக்கைகளை தனக்கு வழங்க வேண்டும்'' என கோரியிருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை பாதுகாத்து ஒப்படைக்க வேண்டும், அமுதா ஐஏஎஸ் அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்து 3 மாதங்கள் ஆகியும் அரசுத்தரப்பில் தற்போது வரை அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இது உச்ச நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும் என வாதிடப்பட்டது.
தொடர்ந்து அரசுத்தரப்பில், ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அமுதா ஐஏஎஸ் அறிக்கையை மனுதாரருக்கு வழங்க கால அவகாசம் தேவைப்படுகிறது என வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் வாசிக்கலாமே...
மும்பை காவல் துறைக்கு திடீர் மிரட்டல்: இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
நரி, அமுல் பேபி என தினேஷ்- விஷ்ணு மோதல்:பிக் பாஸ் இல்லத்தில் அதகளம்!
'பிரதமர் மோடிதான் சிறந்த நடிகர்' - நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்!
என்.சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடையா?: உயர் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!