பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து... வெடித்துச் சிதறிய பேரல்கள்... விடிய, விடிய போராடி தீயணைப்பு!

தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.
தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.

சென்னையில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

சென்னை அம்பத்தூரில் தொழிற்பேட்டை 2 வது பிரதான சாலையில் பிரபு என்பவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

தொழிற்சாலையில் பற்றி எரியும் தீ
தொழிற்சாலையில் பற்றி எரியும் தீ
தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.
தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.

இந்நிலையில் நள்ளிரவு இந்த தொழிற்சாலையில் தீடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் அம்பத்தூர், ஆவடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலில் இருந்து 20 தீயணைப்பு வாகனம், 30 தண்ணீர் லாரி, 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த தீவிபத்தில் தொழிற்சாலையில் வைத்திருந்த கெமிக்கல் பேரல்கள் வெடித்து சிதறின.

தீயணைப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள்.
தீயணைப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள்.
தீயணைப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள்.
தீயணைப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள்.

தீயணைப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள்.இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. விடிய விடிய பல மணிநேரம் போராடி வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மூலப்பொருள் எரிந்து சாம்பலானது. மேலும் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் இத்தீவிபத்து பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அம்பத்தூர் எஸ்டேட் போலீஸார் தீவிபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் கடந்த 2007-ம் ஆண்டு இதே தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in