ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு; நகைப் பட்டறை ஊழியருக்கு வலைவீச்சு

ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு; நகைப் பட்டறை ஊழியருக்கு வலைவீச்சு
மாதிரிப் படம்

சென்னை, கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார்(37). இவர், அதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சொந்தமாக நகைப் பட்டறை நடத்திவருகிறார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தப்பன் ரூடி தாஸ்(36) என்பவர், அருண் குமாரின் நகைப் பட்டறையில் நகைக் கட்டிங் வேலைக்குச் சேர்ந்தார்.

இந்நிலையில் செப்.13 அன்று, கட்டிங் செய்வதற்காக 1,236 கிராம் தங்கத்தைத் தப்பனிடம் கொடுத்தார் அருண்குமார். பின்னர், 16-ம் தேதி கொடுத்த நகையை வாங்கச் சென்றபோது தப்பனைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அருண், பீரோவைத் திறந்து பார்த்தபோது, 56 சவரன் நகை திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும்.

இதையடுத்து, நகையைத் திருடிச் சென்ற ஊழியர் தப்பனைக் கைதுசெய்து நகையை மீட்டுதரக்கோரி, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் அருண்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், கடையிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories

No stories found.