
திருவள்ளூர் மாவட்டத்தில் காதலி பேச மறுத்தால், காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த புழல் புத்தகரம் விக்னேஸ்வரா நகரை சேர்ந்தவர் சரத்குமார்( 27). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சரத்குமார், சாப்பிட்டுவிட்டு படுக்கை அறைக்குள் தூங்க சென்றார்.
இந்நிலையில், நேற்று காலை சரத்குமார், புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த புழல் போலீஸார் தற்கொலை செய்த சரத்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். காதலி பேச மறுத்ததால் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.