காருக்குள் வைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை: எம்எல்ஏ மகனுக்குத் தொடர்பா?

காருக்குள் வைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை: எம்எல்ஏ மகனுக்குத் தொடர்பா?

ஹைதராபாத்தில் 17 வயது சிறுமியை காரில் வைத்து 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது ஒரு சட்டப்பேரவை உறுப்பினரின் மகன் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மே 28-ம் தேதி பார்ட்டி முடிந்து 17 வயது சிறுமி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சிறுமி தனது பெற்றோரிடம், சிலர் தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், சிறுமியின் உடம்பில் இருந்த காயத்தைப் பார்த்து அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் பிறகு அவர்கள் விசாரித்தபோது நான்கு பேர் கொண்ட கும்பல் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறினார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரும் சிறுவர்கள் என்று கூறப்படுகிறது. இதில் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் கூறினார். இச்சம்பவத்தில் ஈடுபட்டது ஒரு சட்டப்பேரவை உறுப்பினரின் மகன் என்றும் தகவல் வந்துள்ளதால், அது குறித்தும் ஜூப்ளி ஹில்ஸ் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in