அதிர்ச்சி... நெல்லையில் இளம்பெண் படுகொலை; காதல் விவகாரத்தில் வாலிபர் வெறிச்செயல்

இளம்பெண் படுகொலை
இளம்பெண் படுகொலை

காதல் விவகாரத்தில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை டவுன் கீழ ரத வீதியில் பேன்சி ஸ்டோர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் சந்தியா (18) என்ற இளம் பெண் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் வேலைக்கு இன்று காலை வந்த சந்தியா கடையிலிருந்து குடோனுக்கு பொருள்கள் எடுத்து சென்று இருக்கிறார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர் கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் அருகே நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த கொலை தொடர்பாக நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். காதல் விவகாரத்தில் இந்த படுகொலை நடந்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in