மகாராஷ்டிராவில் ரயில் நிலையத்தில் 16 வயது சிறுமி 7 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், தானேயில் உள்ள பிவாண்டி நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கர்பாவ் ரயில் நிலையத்திற்கு அழைத்துள்ளார். இதை நம்பி அங்கு சென்ற சிறுமியை அவரது நண்பர், ரயில் தண்டவாளம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரது 6 நண்பர்கள் இருந்தனர்.
அவர்கள் ஏழு பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் இதை வெளியே சொன்னால் கொலை செய்வோம் என்று மிரட்டினர். இதனால், உடனடியாக அவர் வெளியே சொல்லவில்லை.
ஆனால், மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுமி, போலீஸில் புகார் அளித்தார். இதன் பேரில் 7பேர் மீதும் போக்சோ சட்டத்தின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு பேரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மூன்று பேரைத் தேடி வருகின்றனர்.
ஆண் நண்பரை நம்பிச் சென்ற சிறுமியை 7 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் தானேயில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.