கல்லூரி மாணவி தலையில் கல்லைப் போட்டுக் கொலை: ஒரு தலைக்காதலால் வாலிபர் வெறிச்செயல்


கல்லூரி மாணவி தலையில் கல்லைப் போட்டுக் கொலை: ஒரு தலைக்காதலால்  வாலிபர் வெறிச்செயல்
ரோஜா

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் தலையில், கல்லைப் போட்டு கொலை செய்து விட்டுத் தலைமறைவான இளைஞரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

சேலம் மாவட்டம், கூனமலைப் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு நந்தினி, ரோஜா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ரோஜா அருகில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள தாண்டவராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இவர் கூனமலையில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு அடிக்கடி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கூனமலைக்கு வரும்போதெல்லாம் ரோஜாவிடம் தன்னைக் காதலிக்குமாறு சாமிதுரை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவரின் விருப்பத்திற்கு இணங்காமல், ரோஜா கடந்த மூன்று வருடமாக சாமிதுரையைத் தவிர்த்து வந்துள்ளார். இந்த தகவல் ரோஜாவின் பெற்றோருக்குத் தெரியவந்ததால், சாமிதுரையை எச்சரித்து அனுப்பி இருக்கிறார்கள்.

சாமிதுரை
சாமிதுரை

இந்த நிலையில் ரோஜாவிற்குத் திருமண ஏற்பாடுகளை அவரது வீட்டில் செய்துவந்தனர். திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காக நேற்று இரவு பெற்றோர்கள் வெளியில் சென்றிருந்தனர். நந்தினியும், அவரது தங்கை ரோஜாவும் தனிமையில் இருப்பதை அறிந்த சாமிதுரை அவர்களின் வீட்டிற்குச் சென்றுள்ளார். மேலும், என்னை காதலிக்காவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன் என அந்த மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து நந்தினி, ரோஜா என இருவர் மீதும் ஊற்றியுள்ளார். இதையடுத்து இருவரும் கூச்சலிட்டு அங்கிருந்து வயல்வெளி வழியாகத் தப்பி ஓடினர். அப்போது தடுக்கி விழுந்த ரோஜாவின் தலையில் சாமியாரைக் கல்லைப் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துவிட்டார். ரத்த வெள்ளத்தில் துடித்த ரோஜாவை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ரோஜா ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சாமிதுரையை தனிப்படை அமைத்துத் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in