கஞ்சா வியாபாரி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை... பைக்கில் தப்பிய கொலையாளிகள்!

சரண்
சரண்

திருமுல்லைவாயில் அருகே கஞ்சா வியாபாரி ஒரு கும்பலால் இன்று ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை
கொலை

சென்னை அயப்பாக்கம் டிஎன்எச்பி குடியிருப்பில் வசித்து வருபவர் சரண் என்ற பச்சைக்கிளி(20). ரவுடி மற்றும் கஞ்சா வியாபாரியான இவர் அம்பத்தூர் பாடிக்குப்பம் பகுதியில் வசித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சரண் அயப்பாக்கம் பகுதியில் குடியேறியதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று மதியம் சரண் பருத்திப்பட்டு அருகே நடந்து வரும் போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றது. அப்போது உயிரைக் கையில் பிடித்து கொண்டு தப்பி ஓடிய ரவுடி சரணை அந்த கும்பல் விரட்டிச் சென்று திருமுல்லைவாயில் அபர்ணா நகர் குளம் அருகே மடக்கி பிடித்து சரமாரி வெட்டி விட்டு தப்பிச் சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் ரவுடி சரண் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.‌

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே திருமுல்லைவாயில் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீஸார் சரண் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கொலையான ரவுடி சரண் ஜெ.ஜெ நகர் பகுதியில் கஞ்சா விற்று வந்ததும், அவர் மீது கொலை முயற்சி மற்றும் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார் கஞ்சா விற்பனையில் ஏற்ப்பட்ட தொழில் போட்டி காரணமாக சரண் கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமா கொலை செய்யப்பட்டாரா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடுரோட்டில் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!

பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை

க்ளாமர் லுக்கில் கெத்து காட்டும் நயன்தாரா!

இடது பக்கம் அண்ணாமலை... நடுவில் முதல்வர் விஜய்யாம்... வலது பக்கம் டிடிவி; ரசிகர்களின் அட்ராசிட்டி போஸ்டர்

மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in