பலாத்காரம் செய்து டிராக்டரில் கை, கால்கள் கட்டப்பட்ட சிறுமி... பதைபதைக்க வைத்த அதிர்ச்சி சம்பவம்!

பலாத்காரம் செய்து டிராக்டரில் கை, கால்கள் கட்டப்பட்ட சிறுமி...  பதைபதைக்க வைத்த அதிர்ச்சி சம்பவம்!

15 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு டிராக்டரில் கை, கால்களைக் கட்டி விட்டு தலைமறைவான மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், பரேலியில் 15 வயது சிறுமி நேற்று முன்தினம் காணாமல் போனார். அவரை சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று டிராக்டர் தள்ளுவண்டியின் அடியில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த சிறுமியை இருவர் கூட்டுப் பலாத்காரம் செய்து விட்டு டிராக்டர் வண்டியின் அடியில் கை, கால்களைக் கட்டி வைத்து விட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதில், அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தொலைபேசியில் எங்கள் மகளை ஒருவருடன் பேசச் செய்துள்ளார் என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி கௌரவ் சிங் கூறுகையில்," கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் செல்போனில் சிறுமியை ஒருவருடன் பேசச் செய்துள்ளார். இதை நம்பி ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்கு சிறுமி சென்றுள்ளார். அங்கு அவருக்கு செல்போனில் பேசிய நபரும், மற்றொருவரும் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். இதன் பின் அவரது கை, கால்களைக் கட்டி விட்டு தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பெண் உள்பட மூன்று பேரை வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறோம்" என்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பரேலியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in