புதிதாக செல்போன் வாங்கி தராததால் விரக்தி... விஷம் குடித்து இளைஞர் தற்கொலை!

தற்கொலை
தற்கொலை

கர்நாடகாவில் குடும்பத்தினர் புதிதாக செல்போன் வாங்கி தராத விரக்தியில், இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கேரா தாலுகா கொலால் கிராமத்தைச் சேர்ந்தவர் யஸ்வந்த் (வயது 20). கடந்த 8-ந்தேதி அந்தப்பகுதியில் விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, யஸ்வந்தின் செல்போன் குளத்துக்குள் விழுந்து மாயமானது. இதனால் யஸ்வந்த் மனமுடைந்த அவர், தனது தாத்தாவிடம் புதிய செல்போன் வாங்கி தரும்படி கேட்டுள்ளார்.

அவர், தான் வெங்காயம் சாகுபடி செய்துள்ளதாகவும், அதனை விற்று செல்போன் வாங்கி கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனாலும் தனக்கு உடனடியாக செல்போன் வேண்டும் என்று யஸ்வந்த் அடம்பிடித்துள்ளார். ஆனால், அவரது தாத்தாவால் செல்போன் வாங்கித்தர இயலவில்லை.

விஷம்
விஷம்

இதனால் மனமுடைந்த யஸ்வந்த், கடந்த 18-ம் தேதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த யஸ்வந்த் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். செல்போன் வாங்கிதராத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in