கர்ப்பிணி போல நடித்து பிச்சையெடுத்த பெண்கள்.. சுத்துப்போட்டு அம்பலப்படுத்திய மக்கள்!

வயிற்றில் துணி வைத்து கர்ப்பிணி போல நடித்து மோசடி
வயிற்றில் துணி வைத்து கர்ப்பிணி போல நடித்து மோசடி

திருப்பூர் பேருந்து நிலையத்தில் பெண்கள் வயிற்றில் துணியை சுற்றிக் கொண்டு கர்ப்பிணி போல நடித்து மோசடியில் ஈடுபடுவதாக வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பல விதங்களில் மோசடி நடைபெறுவதாக புகார் எழுந்து வரும் நிலையில், பொதுமக்களிடம் பணம் பறிக்க பல விதங்களில் ஏமாற்றி வருகின்றனர். அதில் ஒன்று கர்ப்பிணி போல வயிற்றில் துணி சுற்றிக் கொண்டு பிச்சை எடுப்பது போலவும், சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் பணம் தொலைந்து விட்டது என ஆளுக்கு தகுந்தார் போல ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

திருப்பூர்
திருப்பூர்

இந்நிலையில் பேருந்து நிலையத்தில் செயல்படாத எஸ்கலேட்டர் பகுதியில் பெண்கள் இருவர் வயிற்றில் துணியை சுற்றிக் கொண்டு இருப்பதை கண்ட பொதுமக்கள் சிலர், அங்கிருந்த பெண் ஒருவர் உதவியுடன் அவர்களின் வயிற்றில் கட்டியிருந்த துணியை அகற்றி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

மோசடியில் ஈடுபட்ட பெண்கள்
மோசடியில் ஈடுபட்ட பெண்கள் HR Ferncrystal

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் இது மட்டுமல்லாது பல வகையிலும் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்து வருவதாகவும், பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். இதுபோன்ற பணம் பறிக்கும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!

கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in