தெலங்கானாவில் சோகம்... தேர்வு வெற்றியை கொண்டாடிய 4 மாணவர்கள் விபத்தில் பலி!

மாணவர்கள் வந்த பைக் மீது மோதிய பஸ்
மாணவர்கள் வந்த பைக் மீது மோதிய பஸ்

தெலங்கானாவில் இன்று நேரிட்ட சாலை விபத்தில் இடைநிலை கல்வி பயிலும் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நிகழ்ந்த இந்த விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எம்.சித்து, பி.கணேஷ், வருண் தேஜ், பி.ரணில் குமார். இவர்கள் 4 பேரும் இடைநிலை கல்வி பயின்று வந்தனர். அம்மாநிலத்தில் இடைநிலை கல்வி என்பது 11 மற்றும் 12-ம் வகுப்பை குறிக்கிறது. இவர்கள் நால்வருமே 17 வயது பிரிவினர் ஆவர்.

வாரங்கல் மாவட்டம், வர்தன்னபேட்டை அருகே விபத்து
வாரங்கல் மாவட்டம், வர்தன்னபேட்டை அருகே விபத்து

இந்நிலையில் தெலங்கானா இடைநிலை கல்வி தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து 4 மாணவர்களும் தேர்வு வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். நேற்று இரவு 4 மாணவர்களும் ஒரே பைக்கில் ஹோட்டலுக்குச் சென்று உணவருந்திவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

வாரங்கல் - கம்மம் நெடுஞ்சாலையில் உள்ள வர்தன்னபேட்டை புறநகர் பகுதியில் வந்தபோது மாணவர்கள் சென்ற பைக், எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த மற்றொரு மாணவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தேர்வில் வெற்றி பெற்றதை கொண்டாடிய மாணவர்கள், விபத்தில் உயிரிழந்த சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தியின் ஆண்மையை பரிசோதிக்க தாய், மகள்களை அவருடன் தூங்க அனுப்புங்கள்... காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!

நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!

முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in