சொத்துக்குவிப்பு வழக்கு; முன்னாள் சார்பதிவாளர், மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை... ரூ.100 கோடி சொத்துக்கள் பறிமுதல்!

ஜானகி ராமன் வசந்தி
ஜானகி ராமன் வசந்தி

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சார்பதிவாளர் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தாத்தையங்கார் பேட்டை, பில்லாதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால் மகன் ஜானகிராமன் (வயது.79), இவர் சார்பதிவாளராக பணிபுரிந்தவர். இவர் சார்பதிவாளராக பணிபுரிந்த 1989-1993 காலத்தில் துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டடி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய முக்கிய இடங்களில் சார்பதிவாளராக பொறுப்பு வகித்துள்ளார்.

ஜானகிராமன்
ஜானகிராமன்

மேற்கண்ட இடங்களில் இவர் பணிபுரிந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமான வகையில் இவரது பெயரிலும், இவரது மனைவி வசந்தி (வயது65) பெயரிலும் வாங்கிக் குவித்த சொத்துக்களின் அப்போதைய மதிப்பு ரூ.32,25,532/- (ரூபாய் முப்பத்தி இரண்டு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து ஐநூற்றி முப்பத்தி இரண்டு மட்டும்) 98% ஆகும்.

இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததன் அடிப்படையில், கடந்த 17.08.2001 அன்று அப்போதைய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் காவல் ஆய்வாளர் அம்பிகாபதியால் வழக்கு தொடுக்கப்பட்டது. அதோடு, புலன் விசாரணை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கு தற்போது காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், சிறப்பு அரசு வழக்குறைஞர் சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர் சேவியர்ராணி மற்றும் உதவி ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோரால் நடத்தப்பட்டு வந்தது.

வசந்தி
வசந்தி

இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த இந்த வழக்கில், விசாரணை முடிவுற்று இன்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயனால், முதல் குற்றவாளி ஜானகிராமன் மற்றும் அவரது மனைவியும், இரண்டாம் குற்றவாளியுமான வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், மேற்படி வருமானத்திற்கு அதிகமாக குற்றவாளிகளால் சேர்க்கப்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்குமாறும் அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

மேற்படி சார்பதிவாளர் ஜானகிராமன் பெயரிலும், அவரது மனைவி வசந்தி பெயரிலும் வில்பட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் வாங்கிய சொத்தின் தற்போதைய மதிப்பு மட்டும் சுமார் ரூ.100 கோடிக்கும் மேலாகும் என தெரிய வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தியின் ஆண்மையை பரிசோதிக்க தாய், மகள்களை அவருடன் தூங்க அனுப்புங்கள்... காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!

நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!

முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in