லண்டனில் சாலை விபத்தில் உயிரிழந்த இந்திய பெண்... நிதி ஆயோக்கில் பணிபுரிந்தவர்!

 சீஸ்தா கோச்சார்
சீஸ்தா கோச்சார்

லண்டனில் இந்திய மாணவி சீஸ்தா கோச்சார், சாலை விபத்தில் உயிரிழந்தார். அவர் இந்தியாவில் நிதி ஆயோக் குழுவில் முன்னர் பணிபுரிந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2021-2023 காலகட்டத்தில் இந்தியாவில் நிதி ஆயோக் தேசிய நடத்தை நுண்ணறிவு பிரிவில் மூத்த ஆலோசகராக பணியாற்றியவர் சீஸ்தா கோச்சார் (33). இவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறுவன நடத்தை நிர்வாகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்காக லண்டன் சென்றார். இந்நிலையில் சீஸ்தா கோச்சார் அங்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, டிரக் மோதி உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் 'லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முனைவர் பட்டத்துக்கு படித்து வந்த கோச்சார், முன்பு நிதி ஆயோக்கில் என்னுடன் பணியாற்றியவர். அவர் லண்டனில் விபத்தில் காலமானார். பிரகாசமானவர், புத்திசாலி, தைரியமானவர். சீக்கிரம் போய்விட்டார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்' என பதிவிட்டுள்ளார்.

 சீஸ்தா கோச்சார்
சீஸ்தா கோச்சார்

'தி லண்டன் ஈவினிங் ஸ்டாண்டர்ட்' செய்தி தகவலின்படி, இந்த விபத்து மார்ச் 19 அன்று இரவு 8.30 மணியளவில் (உள்ளூர் நேரம்) நடந்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து, ஃபரிங்டனுக்கும் கிளர்கென்வெல்லுக்கும் இடையிலான அந்த இடத்துக்கு காவல்துறையினர், துணை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அப்போது சீஸ்தா கோச்சார் பலத்த காயமடைந்த நிலையில் காணப்பட்டார். அருக்கு அங்கேயே அவசரமான முதலுவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 33 வயதான அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

சீஸ்தா கோச்சார் இந்திய செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷனின் (சிஓஏஐ) இயக்குநர் ஜெனரலும், ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் டாக்டர் எஸ்.பி. கோச்சாரின் மகள் ஆவார். குர்காமை சேர்ந்த இவர், முன்பு டெல்லி பல்கலைக்கழகம், அசோகா பல்கலைக்கழகம் மற்றும் பென்சில்வேனியா, சிகாகோ பல்கலைக்கழகங்களில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in