முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி திடீர் கைது

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி திடீர் கைது
சச்சினுடன் வினோத் காம்ப்ளிANI

சச்சின் டெண்டுல்கரின் நண்பரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான வினோத் காம்ப்ளி மும்பையில் திடீரென கைது செய்யப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலத்தில் கோலோச்சியர் வினோத் காம்ப்ளி. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரும் கூட. 2000ம் ஆண்டில் அக்டோபர் 29ம் தேதி சார்ஜாவில் நடந்த கோகோ கோலா கோப்பைத் தொடர்தான் இவரது கடைசி போட்டியாகும். இதன் பின்னர் அவர் கிரிக்கெட் போட்டியில் சேர்க்கப்படவில்லை. இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்யிடியில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் வினோத் காம்ப்ளி சிக்கியதால் இவருடனான தொடர்பை சச்சின் துண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வினோத் காம்ப்ளி மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையின் பாந்த்ராவில் உள்ள அவரது குடியிருப்பு வாயிலில் காரை மோதியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மது குடித்திருந்த காம்ப்ளி நிதானம் இழந்து தனது குடியிருப்பு வளாகத்தின் கேட்டில் காரை மோதியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு காவலாளி மற்றும் சில குடியிருப்பாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வினோத் காம்ப்ளி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in